நோபல்
பரிசு
உலகில்
வழங்கப்படுகின்ற
பரிசுகளில்
மிகவும்
பிரபலமானதும்
முக்கியமானதுமான
விருதாகும்.
இப்பரிசுகளின்
உருவாக்குனர்
சுவீட
நாட்டைச்
சேர்ந்த
அல்பிரெட்
நோபெல் ஆவார். இவர்
பல
அறிவியல்
கண்டுபிடிப்புக்களைச்
செய்தவராவார்.
இவர்
டைனமைட்டைக்
கண்டுபிடித்ததன்
மூலம்
பெரும்
பணக்காரானார்.
வெடிபொருட்களை
உற்பத்தி
செய்வது,
அதற்கான
ஆயுதங்களைச்
தயாரிப்பது
என
போரியல்
ஆயுத
விற்பனையே
இவரது
பிரதான
தொழிலாக
இருந்தது. 1988ம்
ஆண்டு -
இறப்பதற்கு
சில
ஆண்டுகளுக்கு
முன் - தனது
சொந்த
மரண
இரங்கல்
செய்தியை
பத்திரிகையில்
வாசிக்கக்
கிடைத்தது.
இவரது
சகோதரரின்
மரணத்ததை
தவறுதலாக
இவருடையது
எனக்கருதிய
பிரெச்சுப்
பத்திரிகையொன்று 'மரண
வியாபாரியின்
மரணம்'
என்ற
தலைப்பில்
இரங்கலொன்றை
எழுதியிருந்தது.
இது,
தான்
இவ்வாறுதானா
உலகால்
நினைவுகூரப்படப்
போகிறேன்
என்ற
கேள்வியை
இவர்
மத்தியில்
எழுப்பியது.
இதன்
விளைவால்
இவரால்
உருவாக்கப்பட்டதே
நோபெல்
பரிசுகள்
ஆகும்.
இவர்
தனது
உயிலில்
மருத்துவம்,
இயற்பியல்,
வேதியல்,
இலக்கியம்
ஆகிய
துறைகளுக்கான
பரிசை
சுவீடன்
வழங்கவேண்டும்
என்றும்
சமாதானத்திற்கான
பரிசையை
நோர்வேயின்
பாராளுமன்றத்தின்
பிரதிநிதிகள்
தெரிவுசெய்து
வழங்க
வேண்டும்
என்று
குறிப்பிட்டார்.
சுவீடன்
ஆதிக்க
நோக்குடைய
நாடாக
இருந்ததும்
நோர்வே
யாருடைய
பக்கமும்
சாராத
நடுவு
நிலைமையை
வெளியுறவுக்
கொள்கையையும்
கொண்டிருந்தபடியால்
அரசியல்
நெருக்குவாரங்களோ
சொந்த
நலன்களுக்கு
அப்பால்
இந்த
சமாதானத்திற்கான
பரிசு
வழங்கப்பட
வேண்டும்
என
நொபெல்
விரும்பினார்.
இந்த
அடிப்படையில் 1901ம்
ஆண்டிலிருந்து
நொபெல்
பரிசுக்கு
ஆண்டு
தோறும்
வழங்கப்பட்டு
வருகின்றது.
அல்பிரெட்
நோபலை
கௌரவிக்கும்
முகமாக
பரிகளைத்
தெரிவுசெய்யும்
முறைக்கான
செலவுட்பட
சகல
நிர்வாகச்
செலவுகளையும்
சுவீடனின்
மத்திய
வங்கி
ஏற்றுக்கொண்டது.
இன்று
உலகில்
இயங்கிவரும்
மிகப்
பழைய
மத்திய
வங்கி
இதுவென்பது
குறிப்பிடத்தக்கது. 1968ம்
ஆண்டு
தனது
நூறாவது
ஆண்டு
நிறைவைப்
நினைவுகூரும்
முகமாக
பொருளாதாரத்துக்கான
நோபெல்
பரிசு
அறிமுகப்படுத்தப்பட்டு
வழங்கப்பட்டு
வருகிறது.
நொபெல்
சமாதானப்
பரிசும்
இலக்கியப்
பரிசும்
ஏகாதிபத்திய
அரசியல்
நோக்கங்களால்
தீர்மானிக்கப்படுகின்றன.
முற்றிலும்
தகுதி
வாய்ந்தோராகத்
தெரிகிற
எவருக்கேன்
அப்பரிசு
இடையிடை
கிடைத்திருந்தால்
அது
மற்ற
நேரங்களில்
வழங்கப்படுகின்ற
பலவற்றைத்
தகுதியுடையனவாகக்
காட்டுவதற்காகவே.
எனினும்,
குறிப்பிடத்தக்களவு
உலக
முக்கியம்
பெற்றோரே
இப்பரிசுகளைப்
பெறுகின்றனர்.
இப்பரிசுகள்
பற்றி
வலியுறுத்த
விரும்புவது
அவை
நடுநிலையான
முடிவுகளின்
படி
கிடைப்பதில்லை
என்பதையே.
பொருளியலுக்கு
வழங்கப்பட்ட
பரிசுகள்
பெரும்பாலும்
ஏகாதிபத்திய,
முதலாளியப்
பொருளியலின்
நியாயங்களை
ஏற்போருக்கே
கிடைத்துள்ளன.
அமர்த்யா
சேனுக்குப்
பரிசு
கிடைத்தபோது
அதுபற்றி
மூன்றாமுலகிலும்
முக்கியமாக
இந்தியாவிலும்
பெருமகிழ்ச்சி
காணப்பட்டது.பொருளியல்
விருத்திக்கு
ஒரு
மனித
மேம்பாட்டு
வளர்ச்சிப்
பரிமாணத்தை
வழங்கியதற்காக
அவர்
மெச்சப்பட்டார்.
எனினும்,
முற்றிலும்
முதலாளிய
மறுப்பான
மாற்றுப்
பொருளியல்
சிந்தனையாளர்
எவரும்
இதுவரை
நொபல்
பரிசு
பெறவில்லை.
உலகின்
எந்தவொரு
விருதும்
பரிசும்
பெறுபவரின்
திறமையை
எடுத்தியம்பும்
கட்டியங்களல்ல.
விருதுகளும்
அத்தனை
புனிதமானவை
அல்ல.
இது
இலங்கையில்
வழங்கப்படும்
சாகித்திய
விருது
தொட்டு
ஆஸ்கார்
விருது,
நோபல்
பரிசு
வரை
எல்லா
விருதுகளுக்கும்
பொருந்தும்.
இருந்தாலும்
கூட
சமாதானத்திற்கான
நோபல்
பரிசு
குறித்த
பெருத்த
எதிர்பார்ப்பு
இன்னமும்
இருந்து
வருகிறது.
ஆனால்
உலகின்
மிகப்பெரிய
கொலைகாரர்களான
கென்றி
கிஸிஞ்சர்,
அல்
கோர்,
ஜிம்மி
காட்டர்
முதற்கொண்டு
ஆபிரிக்க
மக்களை
மனிதர்களாகவே
மதிக்காத
அல்பேர்ட்
சுவைச்சர்
வரை
சமாதானத்தோடு
தொடர்பில்லாதவர்களுக்கே
இப்பரிசு
காலகாலமாய்
வழங்கப்பட்டு
வந்துள்ளது.
2009
இல்
அமெரிக்க
அதிபர்
ஒபாமாவுக்கு
வழங்கப்பட்ட
சமாதானத்துக்கான
நோபெல்
பரிசு
கண்டணத்துக்குட்பட்டது.
நோபல்
பரிசுக்கு
பெயர்களை
பரிந்துரைக்க
கடைசித்தேதி
பிப்ரவரி 1
அதாவது
ஒபாமா,
பதவியேற்ற 12
நாட்களில்
நோபல்
பரிசுக்கு
பரிந்துரைக்கப்பட்டார்.
அந்தப் 12
நாட்களில்
உலக
சமாதானத்திற்காக
ஒபாமா
பெரிதாக
ஒன்றும்
கிழிக்காவிட்டாலும்
அதை
தொடர்ந்த
காலங்களில்
உலக
சமாதானத்திற்காக
அவர்
நிறையவே
கிழித்திருக்கிறார்.
இஸ்ரேலின்
தாக்குதல்களை
நியாயப்படுத்தியது,
நோபல்
பரிசு
பாகிஸ்தானிய
பழங்குடிமக்களை
குண்டு
போட்டுக்
கொன்றது,
ஈராக்கிலும்
ஆப்கானிஸ்தானிலும்
மக்களைக்
கொல்வது
உட்டபட்ட
இன்ன
பல
நற்காரியங்களை
செய்வது,
இலங்கையில்
ஒரு
மனிதப்பேரவலம்
நடக்கும்
போது
அமைதிகாத்தது
என
எவ்வளவோ
செய்திருக்கிறார்.
இவை
ஒவ்வொன்றுமே
தனித்தனி
நோபல்
பரிசு
பெறுமளவுக்கு
தகுதிவாய்ந்த
அற்புதமான
விடயங்கள்.
2010இல்
சீனாவின் மனித உரிமைப் போராளியொருவருக்கு பரிசு வழங்கி தனது சீன எதிர்ப்பு
அமெரிக்க ஆதரவு சாய்வை மீண்டுமொருமுறை நிரூபித்த சமாதானப்
பரிசுக் கமிட்டி தனி மனிதர்களுக்கு வழங்கி மிகவும் வாங்கிக்
கட்டிக்கொண்டதால் கடந்த ஆண்டு ஆட்களுக்கு வழங்காமல் அமைப்பொன்றுக்கு
வழங்கினால் ஆபத்தில்லை என்று கருதி ஜரோப்பிய
ஓன்றியத்துக்கு
வழங்கியது.
சர்வதேச
போர்களின்
புள்ளிவிபரங்களின்படி
நொபெல்
பரிசுக்குழு
ஜரோப்பிய
ஓன்றியத்தைப்
புகழுகின்ற
அமைதி
மிக்க
அறுபது
ஆண்டுகளில் 33
போர்கள்
நடைபெற்றள்ளன.
பல
இலட்சம்
மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள்.
இன்னமும்
சனநாயக
மறுப்பும்
மனித
உரிமை
மீறல்களும்
நிறைந்து
கிடக்கின்றன.
இன்னொரு
புறம்
ஜரோப்பிய
ஓன்றியத்தின்
இராணுவக்
கரமாக
செயற்படுகின்ற
நேட்டோ
உலகெங்கும்
போர்களில்
ஈடுபட்டு
குண்டுவீசி
இலட்சக்கணக்கான
மக்களைக்
கொன்று
நிலைநாட்டிய
சனநாயகத்துக்கும்
மனித
உரிமைகளுக்கும்
சேர்த்துத்தான்
இந்தமுறை
நொபெல்
பரிசு
ஜரோப்பிய
ஓன்றியத்துக்கு
வழங்கப்பட்டுள்ளது.
பொருளாதார
ரிதியில்
இப்போது
ஜரோப்பிய
ஓன்றியம்
தட்டுத்தடுமாறுகிறது.
வேலையின்மைக்கும்
அவர்களது
சமூகப்
பாதுகாப்பைக்
காவுகொல்லும்
சிக்கன
நடவடிக்கைகளுக்கு
எதிரான
மக்கள்
போராட்டங்களை
காவல்
துறையினர்
வன்முறையை
பிரயோகித்து
அடக்குகின்றனர்.
மக்களின்
நியாயமான
போராட்டங்களுக்கெதிராக
அராஜகம்
கட்டவிழ்த்து
விடப்படுகிறது.
கொஞ்சக்காலமாக
அது
தனது
ஓன்றியத்தில்
உள்ள
திவாலான
நாடுகளை
பிணையெடுக்கின்றன.
ஆனால்
நெருக்கடி
இன்னமும்
மோசமாயுள்ளது.
இதனால்
தன்பங்குக்கு
நோபல்
பரிசு
ஜரோப்பிய
ஓன்றியத்தைப்
பிணையெடுத்தது.
மொத்தத்தில் பரிசுகளைப்
பொறுத்தவரையிலோ
பட்டங்களைப்
பொறுத்தவரையிலோ
பெருமளவும்
அவை
அவற்றைப்
பெறுகிறவர்களைப்
பற்றிச்
சொல்லுவதை
விடக்
கொஞ்சம்
அதிகமாக
அவற்றை
வழங்குபவர்களைப்
பற்றியும்
வழங்கப்படுவதற்கான
நோக்கங்கள்
பற்றியும்
சொல்லுகின்றன.
இது
எல்லாப்
பரிசுகளுக்கும்
பொருந்தும்.