Friday, February 1, 2013

எமது வலைப்பதிவு

சமகால அரசியலிலும் சமூக வாழ்விலும் தொழிநுட்பத்திலும் நிகழும் முக்கிய நடப்புக்களை ஆழமாகக் கற்றறிந்துகொள்ளுமுகமாக வாரம் தோறும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் 6:00 மணிக்கு சமூக விஞ்ஞானக் கற்கை வட்டம் கூடுகிறது. முற்றுமுழுதாக திறந்த கலந்துரையாடல் வடிவில் அமையும் இக்கூட்டங்களில் அனைவருமே கலந்துகொள்ள முடியும். அரசியல், தொழிநுட்பம், சமூகம் எனப் பல்வேறு பரப்புக்களில் தெரிவு செய்யப்படும் தலைப்புக்களில் ஒவ்வொரு வாரமும் ஆழமான கலந்துரையாடல் இடம்பெறும். நாம் வாழும் இந்தச் சமூகத்தைக் கற்றறிந்து புரிந்துகொள்ளவும் அப்புரிதலிலிருந்து இச்சமூகத்தை வளர்த்தெடுக்கவும் உங்கள் அனைவரையும் சமூக விஞ்ஞான கற்கை வட்டம் அழைக்கிறது. 

சமூகவிஞ்ஞானக் கற்கை வட்டத்தில் உரையாடப்படும் விடயங்கள் அங்கே வருகைதந்தவர்களுடன் மட்டுமே பகிரப்பட்டு மட்டுப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக வாரம் தோறும் செய்திமடல் ஒன்றும் வெளியிடப்படுகிறது. இச்செய்திமடல் ஒவ்வொரு வாரமும் கலந்துரையாடப்பட்ட விடயங்களின் பொழிப்பினைத் தாங்கி வெளிவருகிறது. 

இதுவரை வெளியான அத்தனை செய்திமடல்களை இந்தத் தொடுப்பில் தரவிறக்கிப் படிக்கலாம். circle.thulaa.net

செய்திமடல்கள் அச்சில் வெளிவருவதாலும் PDF வடிவில் இணையத்தில் சேமிக்கப்படுவதாலும் இணையத்தில் ஏதாவதொரு விடயத்தைத் தமிழில் தேடுபவர்களுக்கு அச் செய்திமடல்களின் உள்ளடக்கத்தினைத் தேடிப்பெற முடிவதில்லை. இது ஒரு பெருங்குறையாக எமக்கு இருந்துவந்தது. 

இக்குறையினைத் தீர்க்குமுகமாக செய்திமடலின் முதன்மை உள்ளடக்கங்கள் இணையப் பாவனையாளர்களுக்கு வசதியாக வலைப்பதிவாகப் பிரசுரிக்கப்படவுள்ளன. அந்நோக்கத்துடன் உருவாக்கப்பட்டதே இவ்வலைப்பதிவு. 

சமூக வலைத்தளங்களில் இங்கே பிரசுரிக்கப்படும் விடயங்களைப் பகிரவும் கலந்துரையாடவும், ஆழமான இணைய வழி உரையாடல்கள் அவ்விடயங்கள் மீது நடத்தவும் இவ்வலைப்பதிவு வழிதிறக்கிறது.

No comments:

Post a Comment